தேசிய கார் பந்தயத்தில் அசத்தல் வெற்றி
சென்னை: மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற்ற MRF இந்திய தேசிய ரேசிங் சேலஞ்ச் 4W–2026 தொடரின் 2-வது சுற்றில் இஷான் மாதேஷ், புவன் போனு உள்ளிட்ட வீரர்கள் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்தனர்.
Formula 2000 பிரிவில் இஷான் மாதேஷ் வெற்றி பெற்றார். Formula 1600 பிரிவில் புவன் போனு இரண்டு பந்தயங்களில் முதலிடம் பிடித்தார். Formula LGB 1300 பிரிவில் விஸ்வாஸ் விஜயராஜ் மூன்று பந்தயங்களிலும் வென்று ஆதிக்கம் செலுத்தினார்.
மேலும், ஃபோக்ஸ்வேகன் போலோ கோப்பை மற்றும் சூப்பர் ஸ்டாக் பிரிவுகளிலும் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
