City Updates

சென்னையில் ‘The Art of Yoga: 3335 Yogasana and Sadhana’ புத்தகம் மற்றும் இசை ஆல்பம் வெளியீடு

சென்னை: ஆன்மீகம், யோகா மற்றும் இசையை ஒருங்கிணைக்கும் “The Art of Yoga: 3335 Yogasana and Sadhana” புத்தகம் மற்றும் இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

ஆன்மீக குரு சுவாமி தன்வீர் தயானந்த யோகி ஜி எழுதிய இந்த நூலில் 3,335 யோகாசனங்கள் மற்றும் சாதனா முறைகள் தொகுக்கப்பட்டுள்ளன. யோகா பயிற்சியைத் தொடங்குபவர்கள் முதல் ஆன்மீகப் பயணத்தில் ஈடுபடுவோர் வரை அனைவருக்கும் வழிகாட்டும் நூலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் நடிகர் ரிஷி ரித்விக், புலவர் பட்டிமன்றப் பேச்சாளர் ராமலிங்கம், பேச்சாளர் மதுரை ராமகிஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு நூல் மற்றும் இசை ஆல்பத்தை வெளியிட்டு வாழ்த்தினர்.

மேலும், அரசுத் துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், திரைப்படத் துறையினர், சர்வதேச யோக ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர்கள், யோகாவின் பாரம்பரிய அறிவை உலகளவில் பரப்பும் முயற்சியாக இந்த நூல் அமைந்துள்ளதாகவும், உடல், மனம் மற்றும் ஆன்ம நலனை மேம்படுத்த விரும்புவோருக்கு இது பயனுள்ள கையேடாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

யோகா, ஆன்மீகம் மற்றும் இசையை ஒரே மேடையில் இணைத்து நடைபெற்ற இந்த வெளியீட்டு விழா, பங்கேற்பாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *