சுந்தரம் ஃபைனான்ஸ் CGTMSE உறுப்பினர் நிறுவனமாக பதிவு
சென்னை: சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட், குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளையான (CGTMSE) உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனமாக (MLI) பதிவு பெற்றுள்ளது.
இதன் மூலம் தகுதியான குறு மற்றும் சிறு நிறுவனங்கள், சுந்தரம் ஃபைனான்ஸ் வழியாக அரசின் கடன் உத்தரவாத ஆதரவுடன் பிணையமற்ற கடன் வசதிகளைப் பெற முடியும்.
தொழில் விரிவாக்கம், செயல்பாட்டு மூலதனம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட தேவைகளுக்கு இந்த வசதி உதவும்.
சுந்தரம் ஃபைனான்ஸ் நிர்வாக இயக்குநர் ராஜீவ் லோச்சன் கூறுகையில், போதுமான பிணையச் சொத்துகள் இல்லாத குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கும் முறையான நிதி வசதிகளை விரிவுபடுத்த இந்த இணைப்பு உதவும் என்றார்.
இந்திய அரசு மற்றும் SIDBI இணைந்து உருவாக்கிய CGTMSE திட்டம், உறுப்பினர் கடன் நிறுவனங்கள் மூலம் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு பிணையமற்ற கடன்களை வழங்க கடன் உத்தரவாதம் அளிக்கிறது.2024-25 நிதியாண்டில் CGTMSE சுமார் ரூ.3.06 லட்சம் கோடி மதிப்பிலான கடன் உத்தரவாதங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
