சுந்தரம் ஃபைனான்ஸ், GMT இன்ஜினியர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மேம்பட்ட உலோக வடிவமைப்பு இயந்திரங்களுக்கு எளிதான நிதி வசதி வழங்குகிறது
சென்னை: இந்தியாவின் மிகவும் நம்பகமான NBFC-களில் ஒன்றான சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட் தென்னிந்தியாவின் முன்னணி உலோக வடிவமைப்பு இயந்திரங்கள் மற்றும் தானியக்கத் தீர்வுகளை வழங்கும் GMT என்ஜினீர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் மூலோபாய கூட்டாண்மையில் இணைந்துள்ளது. இந்த கூட்டாண்மையின் மூலம் GMT நிறுவனத்தின் மேம்பட்ட CNC வளைப்பு இயந்திரங்கள், ஃபைபர் லேசர் வெட்டும் அமைப்புகள், பவர் பிரஸ்கள் மற்றும் தானியக்க உபகரணங்களை வாங்க விரும்பும் உற்பத்தியாளர்களுக்கு விரைவான, வசதியான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட நிதி தீர்வுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த கூட்டாண்மை, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள், ஜாப் ஷாப்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கு மூலதன அணுகலை எளிதாக்கி, உலகத் தரத்திலான உற்பத்தித் தொழில்நுட்பங்களை விரைவாகப் பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், சுந்தரம் ஃபைனான்ஸின் எளிமைப்படுத்தப்பட்ட நிதி செயல்முறையையும் GMT இன்ஜினியர்ஸின் உயர் செயல்திறன் கொண்ட இயந்திரங்களின் உடனடி கிடைப்புத் தன்மையையும் பயன்படுத்தி, தங்களது உற்பத்தித் திறனை விரிவுபடுத்தவும், செயல்திறனை மேம்படுத்தவும், பெரிய வணிக வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் முடியும்.
இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த BS பிரசாத், நிர்வாக இயக்குநர், GMT என்ஜினீர்ஸ் பிரைவேட் லிமிடெட் கூறியதாவது:
“எங்கள் உலோக வடிவமைப்பு இயந்திரங்களுக்கான நிதி வசதியை எளிதாக்கும் வகையில் சுந்தரம் ஃபைனான்ஸுடன் ஏற்பட்டிருக்கும் இந்த மூலோபாய கூட்டாண்மை, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. தென்னிந்திய உற்பத்தியாளர்கள் நிலையான வளர்ச்சியை அடையத் தேவையான மேம்பட்ட அதிக உற்பத்தித் திறன் கொண்ட CNC வளைப்பு இயந்திரங்கள், ஃபைபர் லேசர் வெட்டும் அமைப்புகள் மற்றும் பவர் பிரஸ்களை வழங்குவதே எங்கள் நோக்கம். உடனடி விநியோகத்திற்குத் தயாராக உள்ள இயந்திரங்களையும், சுந்தரம் ஃபைனான்ஸின் விரைவான மற்றும் தடையற்ற நிதி வசதியையும் ஒருங்கிணைப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் உற்பத்தித் திறனை அதிகரிப்பதிலும், புதிய ஆர்டர்களைப் பெறுவதிலும் முழு கவனம் செலுத்த முடியும். இதன் மூலம் அவர்கள் பெரிய ஒப்பந்தங்களை முழு நம்பிக்கையுடன் ஏற்க முடியும்.”
இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த ராகுல் ஜோதி குமரன், மூத்த பொது மேலாளர் மற்றும் SME பிரிவு தலைவர்,சுந்தரம் ஃபைனான்ஸ், கூறியதாவது:
“இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதில், குறிப்பாக MSME-கள் மற்றும் வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு எளிதில் நிதி அணுகலை வழங்குவதில் சுந்தரம் ஃபைனான்ஸ் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. நமது நாடு ‘Make in India’- வை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த சூழலில், தரத்தை மேம்படுத்தவும், செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், உலகளாவிய அளவில் போட்டியிடவும் விரும்பும் உற்பத்தியாளர்களுக்கு நவீன மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்தும் உபகரணங்களுக்கான அணுகல் மிகவும் அவசியமானதாகும். GMT என்ஜினீர்ஸ் பிரைவேட் லிமிடெட் உடனான எங்கள் கூட்டாண்மையின் மூலம், தென்னிந்தியாவெங்கும், குறிப்பாக போதுமான சேவைகள் கிடைக்காத தொழில்துறை மையங்களிலும், மேம்பட்ட உலோக வடிவமைப்பு மற்றும் தானியக்கத் தீர்வுகளை மேலும் எளிதாகக் கிடைக்கச் செய்ய விரும்புகிறோம். GMT நிறுவனத்தின் நவீன தொழில்நுட்ப இயந்திரங்களையும், எங்களின் நெகிழ்வான மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட நிதி தீர்வுகளையும் இணைப்பதன் மூலம், உற்பத்தியாளர்கள் தன்னம்பிக்கையுடன் முதலீடு செய்யவும், செயல்திறனை உயர்த்தவும், புதிய வளர்ச்சி வாய்ப்புகளைப் பெறவும் உதவி செய்கிறோம்.”
இந்த கூட்டாண்மை, தொழில்நுட்பத் தழுவலை மேலும் எளிதாக்கி, உற்பத்தித் திறனை உயர்த்தும் உபகரணங்களில் நிறுவனங்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்ய உதவுவதன் மூலம் இந்தியாவின் உற்பத்தித் துறைக்கு ஆதரவு வழங்கும் சுந்தரம் ஃபைனான்ஸின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.
