City Updates

மீனாட்சி மிஷன் மருத்துவமனைத் தலைவர் குருசங்கருக்கு அச்சுறுத்தல்? – ஆடியோவால் பரபரப்பு

மதுரை: மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் S. குருசங்கரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசப்பட்டதாகக் கூறப்படும் ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது சகோதரி டாக்டர் பிரதீபா பேசியதாகக் கூறப்படும் அந்த ஆடியோவில், டாக்டர் குருசங்கரை அச்சுறுத்தும் வகையில் கடுமையான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆடியோவின் உண்மைத் தன்மை மற்றும் அது பதிவு செய்யப்பட்ட சூழல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *