சதமடித்தது சென்னையில் தக்காளி விலை
சென்னை: பண்டிகைகள் நெருங்கி வருவதாலும், கர்நாடக – ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்து வருவதாலும் சென்னையில் காற்கறிகளின் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்றம் காணப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று கோயம்பேடு மார்க்கெட் மொத்த வியாபாரத்தில் வெங்காயம் கிலோவிற்கு 40 முதல் 60 ரூபாய் வரையிலும், தக்காளி 50 முதல் 90 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பண்டிகைகள் வரிசைக்கட்டி கொண்டு வருவதால் விலையில் தொடர்ந்து ஏற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ். முத்துக்குமார் கூறுகையில், கோயம்பேட்டில் மொத்த வியாபாரத்தில் கிலோவிற்கு 90 ரூபாய் வரையில் தக்காளி விற்பனை செய்யப்படுவதாகவும், எனவே வெளி மார்க்கெட்டில் முதல் ரக தக்காளி கிலோவிற்கு 100 ரூபாய் என விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 120 ரூபாய் என்று வரும் தகவல்கள் தவறானது எனவும் தெரிவித்தார்.