டைட்டனின் ஸ்கின்ன் அறிமுகப்படுத்தும் ’24செவன்’ வாசனை திரவியம்! – ‘24செவன்’ மூலம் மலிவு விலைகளிலான வாசனை திரவிய சந்தையில் தடம்பதிக்கிறது டைட்டனின் ஸ்கின்ன்!!
சென்னை: டைட்டனின் புகழ்பெற்ற இந்திய நறுமண பிராண்டான ஸ்கின்ன் [SKINN], தனது புதிய மலிவு விலை வாசனைத் திரவிய தயாரிப்புகளின் வரிசையான ‘ஸ்கின்ன் 24செவன்’ [SKINN 24Seven]-ஐ அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது. இந்த செயல்பாட்டு உத்தி சார்ந்த அறிமுகமானது, ஸ்கின்ன் மிக துரிதமாக மேற்கொண்டு வரும் சந்தை விரிவாக்கத்தை குறிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
மேலும் வாசனை திரவிய சந்தையில், எல்லோராலும் வாங்க முடிகிற ப்ரீமியம் தரத்திலான வாசனை திரவியங்களுக்கென அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் களமிறங்கி இருக்கிறது 24செவன். நாம் தினமும் பயன்படுத்துவதற்கு உகந்த இந்த வாசனை திரவிய தொகுப்பானது, இந்திய வாசனை திரவிய சந்தையில் இதுவரையில்லாத ஒரு புதிய பிரிவை உருவாக்கும் என்பதோடு, அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த ஒன்றாக இருக்கும் வகையில் வாசனை திரவியங்களை வழங்குகிறது.
’SKINN 24Seven’ வாசனை திரவிய தொகுப்பானது, சாதாரணமானவற்றையும் மயக்கும் நறுமணத்துடன் அசாதாரணமானதாக அசத்த செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட Eau De Parfums தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. ஸ்கின்ன் 24செவனின் புதிய தயாரிப்புகளின் மூலம் ’சாதாரணமானதை சிறப்பாக்குவதோடு, ஒவ்வொரு நாளையும் மாயாஜாலமாக்குங்கள்” [Make the ordinary special and every day magical with the new range of SKINN 24seven”] என்ற பிராண்ட்டின் தனித்துவ அடையாளப்படுத்துதலின் மூலம், “ஒவ்வொரு மணிநேரத்திற்கும், ஒவ்வொரு நாளும் சிறந்த வாசனை திரவியங்களை” [fine fragrances for every hour, every day] கொண்டாட வாடிக்க8யாளர்களை உற்சாகப்படுத்துகிறது.
இந்திய வாசனை திரவியங்கள் மற்றும் டியோடரன்ட் [Deodorant] சந்தையின் மதிப்பு தோராயமாக 10,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் வாசனை திரவியங்கள் 4500 கோடி ரூபாய் மற்றும் டியோடரன்ட்கள் 5500 கோடி ரூபாய் மதிப்புடன் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. 4500 கோடி ரூபாய் மதிப்புடைய சந்தையில் 2500 கோடி ரூபாயாக இருக்கும் வாசனை திரவியங்கள் வகையின் ஒழுங்கமைக்கப்பட்ட அளவு அடுத்த 5 ஆண்டுகளில் அதன் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 12-13% [CAGR] ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சிறந்த வாசனை திரவிய சந்தையில் ஸ்கின்ன் முன்னோடியாக இருந்து வருகிறது. மேலும் நீண்ட காலமாக ப்ரீமியம் தரத்திலான, எல்லோராலும் பயன்படுத்த முடிகிற மலிவான விலையிலான தயாரிப்புகளுக்கான ‘ Masstige’ பிரிவில் முன்னணியில் இருக்கிறது. வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் மாறிவருவதோடு அதிகரித்து வருகின்றன.
மேலும் அவர்களின் செலவிடும் வருமானத்தின் அளவும் அதிகரித்து வருவதால், மலிவான விலையில் கிடைக்கும் உயர்தரத்திலான வாசனை திரவியங்களுக்கான தேவை வெகுவாக அதிகரித்து இருக்கிறது. விருப்பத்தேர்வுகள் உருவாகி, செலவழிக்கக்கூடிய வருமானம் உயரும்போது, மலிவு விலையில் உயர்தர வாசனை திரவியங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஸ்கின்ன் 24செவன், வளர்ச்சிக்கண்டு வரும் இந்த சந்தையில் களமிறங்க உத்திசார்ந்த செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, விவேகமுள்ள வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் உயரிய தரம், மலிவு விலை மற்றும் தனித்துவ பாணி ஆகியவற்றை மிக நேர்த்தியாக கலந்த மிகச் சரியான கலவையை வழங்குகிறது.
டைட்டன் கம்பெனி லிமிடெட்டின் வாசனை திரவியங்கள் மற்றும் பயன்பாட்டு அணிகலன்கள் பிரிவின் தலைமை செயல் அதிகாரி மணீஷ் குப்தா [Manish Gupta, CEO, Fragrances and Accessories Division, Titan Company Limited,] கூறுகையில், “ஸ்கின்ன் 24செவன் [SKINN 24Seven] வாடிக்கையாளர்கள் தங்களது வாழ்க்கை முறையில் நாம் பின்பற்ற விரும்பும் அன்றாட விருப்பத்தேர்வுகளை மேம்படுத்த மிகச் சிறந்த தேர்வை வழங்குகிறது. வாடிக்கையாளர்களின் அன்றாட பழக்கவழக்கங்களில் வாசனை திரவியத்தை ஒரு தவிர்க்க இயலாத ஒன்றாக மாற்றும் நறுமண முயற்சிக்கு நாங்கள் அன்புடன் அழைக்கிறோம். பிரீமியம் தரம், மலிவு விலை மற்றும் பல நறுமண பிரிவுகளிலான வாசனை திரவியங்கள் ஆகியவற்றின் மூலம், இந்தியச் சந்தைகளில் எந்தவிதமான சமரசமும் செய்யாமல், பிரீமியம் வாசனை திரவியங்களை இன்றைய இளைய தலைமுறையினர் எல்லோருக்கும் எளிதில் கிடைக்க செய்வதையே நாங்கள் எங்களுடைய இலக்காக கொண்டிருக்கிறோம். மேலும் எங்களது கவனம் முழுவதும் இந்தியா முழுமைக்குமான சந்தையின் மீது இருக்கிறது. மலிவு விலையிலான ப்ரீமியம் தயாரிப்புகளுக்கு இங்கே இருக்கும் வரவேற்பையும், வாய்ப்புகளையும் நாங்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறோம்’’ என்றார்.
ஸ்கின்ன் 24செவன் வாசனை திரவியத்தில் இருக்கும் நறுமணம் அளிக்கும் மூலப்பொருட்கள் நம்முடைய பலவிதமான உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன. ஓசியானிக் மற்றும் சிட்ரஸ் ஆகியவற்றினால் செய்யப்பட்ட வாசனை திரவியம் [Oceanic and citrus notes], எர்த்தி மற்றும் வுட்டி ஆகியவற்றின் அடிப்படையிலான [earthy and woody accords] வாசனை பிரிவுடன் இணைந்து, மனதை எளிதாக்கும், ஆடம்பரமில்லாத ஆனால் அருமையான உணர்வை உருவாக்குகின்றன.
இதற்கிடையில், ஆம்பர் மற்றும் கெளர்மண்ட் [amber and gourmand accents] அடிப்படையிலான வாசனை பிரிவில் ப்ளோரல் மற்றும் ஃபுரூட்டி [floral and fruity notes] ஆகியவற்றில் உருவாக்கப்பட்டிருக்கும் வாசனை திரவியம் மகிழ்ச்சி மற்றும் கதகதப்பான அரவணைப்பின் உணர்வுகளைத் தூண்டுகின்றன. சுலபமாக பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் வாசனை திரவியம் இருக்கும் கண்ணாடி குப்பியின் வடிவமைப்பு எந்த சூழ்நிலையிலும் எளிதில் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது.
அதே நேரம் மனதைக் கவரும் வகையிலான இதன் மிக எளிமையான பேக்கேஜிங் வாசனை திரவியங்களின் நேர்த்தியை நிறைவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நறுமணமும் 6-8 மணிநேரம் வரை நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், நாள் முழுவதும் நறுமணத்துடன் மனதை மென்மையானதாக உணர்வதை ஸ்கின்ன் 24செவன் உறுதி செய்கிறது.
குப்தா மேலும் கூறுகையில், “நாங்கள் வெறும் வாசனை திரவியங்களை மட்டும் விற்பனை செய்யவில்லை; நாங்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு ஊக்கமளிக்கும் நம்பிக்கை மற்றும் ஸ்டைலை வழங்குகிறோம். ஸ்கின்ன் 24செவன் வாசனை திரவியங்களின் அறிமுகமானது புதுமையை அளிக்கவேண்டுமென்ற எங்களது அர்ப்பணிப்பு மற்றும் இந்திய வாடிக்கையாளர்களிடையே அதிகரித்து வரும் தேவைகளைப் பற்றி நாங்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த புரிதலை பிரதிபலிக்கிறது.” என்றார்.
வெறும் 1,745 ரூபாய் விலையில், ஸ்கின்ன் 24செவன் தரமான வாசனை திரவியங்களை வழங்குகிறது. பல்வேறு விருப்பத்தேர்வுகளை வழங்கும் வாசனை திரவிய சந்தையில், ஸ்கின்ன் 24செவன் தெளிவான, மனநிலை சார்ந்த தேர்வுகளை வழங்குவதன் மூலம் இதர வாசனை திரவியங்களிலிருந்து தனித்து நிற்கிறது. எங்களின் அனைத்து மல்டி-பிராண்ட் ஸ்டோர்களிலும், எங்களது இணையதளமான skinn.in மற்றும் முன்னணி ஈ-காமர்ஸ் தளங்களிலும் கிடைக்கின்றன. ஒவ்வொரு மணிநேரமும், ஒவ்வொரு நாளும் SKINN 24Seven வழங்கும் புதிய வாசனை திரவியங்களின் தொகுப்பைப் பயன்படுத்தி உங்களுடைய ஆளுமையை நறுமணம் மூலம் உணரச் செய்யுங்கள்.