Corporate News

குழந்தைகள் அதிகம் விரும்பும் சன்ஃபீஸ்ட் டார்க் பேண்டஸி பிஸ்கட் புதிய சுவையில் அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சர்வதே விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுக்கு செல்லும் வாய்ப்பையும் அளிக்கும் வகையில் அறிமுகமாகியுள்ளது

  • குழந்தைகளின் கற்பனைகளை வின்வெளி அளவுக்கு பரவ செய்யும் வகையில் மிகவும் கலை திறனை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது
  • சன்ஃபீஸ்ட் டார்க் பேண்டஸி அறிமுகப்படுத்தியுள்ள புதிய பிஸ்கட்களை வாங்கி உண்ணும் குழந்தைகள் சர்வதேச விண்வெளி மையமான நாசாவை பார்வையிடுவதற்கான வாய்ப்புகளை பெறுவதற்கு தேர்வாகலாம்
  • நாசாவை பார்வையிடுவதற்கான வாய்ப்புகளை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்

சென்னை: ஐடிசி நிறுவனத்தின் சன்ஃபீஸ்ட் டார்க் பேண்டஸியின் ஐகானிக் ஃபேண்டஸி ஸ்பேஸ்ஷிப், பெங்களூருவில் வெற்றிகரமான சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு, சென்னையை நோக்கி வந்துள்ளது.

ஐடிசி சன்ஃபீஸ்ட் டார்க் ஃபேண்டஸி நிறுவனத்தின் புதுமையான பிரச்சாரமான “பிக் பேண்டஸிஸ் க்யூ விங்ஸ் டு யுவர் இமாஜினேஷனை” தொடர்ந்தது. அக்டோபர் ஒன்பதாம் தேதி சயின்ஸ் சார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஏராளமான துடிப்பான மாணவர்கள் குழுவினரை, ஐடிசி சன் பீஸ்ட் டார்க் பேண்டஸி குழுவினர் சந்தித்து உற்சாகமூட்டி உள்ளனர்.

இது குறித்து ஐடிசி லிமிடெட் நிறுவனத்தின் உணவு பிரிவின் பிஸ்கட் மற்றும் கேக்ஸ் கிளஸ்டர் நிர்வாக அதிகாரி அலி ஹாரிஸ் ஷேர் கூறுகையில், “சன்ஃபீஸ்ட் டார்க் பேண்டஸியில், குழந்தைகளின் திறன்களை மாற்றி அமைக்க கற்பனை மற்றும் கற்பனையின் ஆற்றல் முக்கியமானது என்று நம்புவதாக தெரிவித்தார்.

பறந்து விரிந்த, பெரிய அளவிலான கற்பனைகள் மூலம் இந்தியாவில் இதுவரை கண்டிராத தொழில்நுட்பத்தை குழந்தைகளிடையே கொண்டு செல்வதில் நாங்கள் பெருமை கொள்வதாக அவர் தெரிவித்தார்.

குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ளவும், அவர்களின் கற்பனைகள் உயிர்பிக்கப்படுவதை காணவும் சென்னையில் உள்ள மாணவர்கள் தங்கள் ஓவியங்களை திரையில் காணும் பொழுது அவர்களின் உற்சாகத்தையும் எதிர்வினைகளையும் காண அடுத்த ஒரு மாதத்தில் இந்த அனுபவத்தை நகரில் உள்ள பிற குழந்தைகளுக்கும் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார்.

குழந்தைகளின் கற்பனைத் திறனை வெளிப்படுத்தவும், பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு அதிநவீன தொழில்நுட்பத்தின் கலவையால் பேண்டஸி ஸ்பேஸ் ஷிப்- மேம்பட்ட திரைகளுடன் பேருந்து ஒன்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை பிரமிக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த தயாரிப்புகள் அனைத்தும் குழந்தைகளின் கைவண்ணங்களால் வரையப்பட்ட வடிவமைப்புகளை துடிப்பான டிஜிட்டல் படைப்புகளாக மாற்றி உருவாக்கப்பட்டுள்ளது.

ஐடிசி நிறுவனத்தின் சன்ஃபீஸ்ட் டார்க் பேண்டஸி இன் ஸ்பேஸ் ஷிப் பிஸ்கட்களுக்கான கவரை ஸ்கேன் செய்தவுடன், அவர்களின் கடைப்படைப்பு டிஜிட்டல் முறையில் 3D இன்டர்ராக்டிவ் கேரக்டர்களாக மாற்றப்பட்டு, பெரிய அளவிலான தொடுதிரைகளில் வெளிப்படுத்தப்பட்டு, மாணவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

சன்ஃபீஸ்ட் டார்க் பேண்டஸி புதிய அறிமுகமான பொருளை வாங்கும் குழந்தைகள் நாசாவை பார்வையிடுவதற்கான வாய்ப்பை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் எல்லையற்ற படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையிலான குறிக்கோள்களுடன், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை இணைத்து இளம் குழந்தைகளின் கற்பனைத் திறனை ஊக்குவிக்கவே இது போன்ற புதிய முயற்சியை ஐடிசி நிறுவனம் மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *