சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் திருச்சி, தஞ்சாவூர் அலுவலகங்கள் புதிய இடத்திற்கு மாற்றம்
இந்தியாவில் வங்கிசாரா நிதி சேவை வழங்கும் நிறுவனங்கள் பிரிவில் செயல்படும் நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ் லிமிடெட், திருச்சி மற்றும் தஞ்சாவூரில் உள்ள இரண்டு கிளை அலுவலகங்களை நகரத்தின் மைய அமைவிடத்திற்கு மாற்றப்படுவதை அறிவித்திருக்கிறது.
வாகனங்களுக்கான கடன் வழங்கல், பொது காப்பீடு, வீட்டுக் கடன்கள் மற்றும் சொத்து மேலாண்மை ஆகிய பல பிரிவுகளில் சேவையாற்றி வரும் சுந்தரம் பைனான்ஸ், தனது வாடிக்கையாளர்களது வசதி மற்றும் நலனுக்கு முன்னுரிமையளிக்கும் நோக்கத்தோடு அலுவலக இடமாற்றத்தை மேற்கொண்டிருக்கிறது.
சுந்தரம் பைனான்ஸ் குழுமம் வழங்கும் விரிவான சேவைகளின் முழு தொகுப்பையும் ஒரே அலுவலகத்திலேயே வாடிக்கையாளர்கள் எளிதாகப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் திருச்சி மற்றும் தஞ்சாவூரில் புதிய மற்றும் பெரிய அமைவிடத்திற்கு தனது கிளை அலுவலகங்களை இந்நிறுவனம் மாற்றியிருக்கிறது.
சுந்தரம் பைனான்ஸ் லிமிடெட், சுந்தரம் ஹோம் பைனான்ஸ் மற்றும் ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகியவற்றின் அலுவலகங்கள் அனைத்தும் இனிமேல் இந்த ஒரு அமைவிடத்திலேயே செயல்படும். தங்களது வெவ்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய மேற்குறிப்பிடப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் அனைத்தையும் ஒரே இடத்திலேயே சுந்தரம் குழுமத்தின் வாடிக்கையாளர்கள் பெற்று பயனடையலாம்.
திருச்சியில் சுந்தரம் பைனான்ஸ் குழுமத்தின் புதிய அலுவலக முகவரி:
எண் 207, முதல் மற்றும் இரண்டாவது தளம்,
முதல் குறுக்குத் தெரு,
பொன் நகர், திருச்சி – 620 001.
தஞ்சாவூரில் புதிய அலுவலக முகவரி:
அபி டவர், முதல் தளம், எண்.70/2,
புதுக்கோட்டை பிரதான சாலை,
ஆக்சிலியம் பள்ளி எதிரில்,
தஞ்சாவூர் – 613 007.