எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழகத்தின் முதல் பல்துறை மேம்பட்ட திறன் மற்றும் தொழில் உருவாக்க மையம் தொடக்கம்
காட்டாங்குளத்தூர்: தொழில்துறை ஆதரவுடன் தமிழகத்தின் முதல் பல்துறை மேம்பட்ட திறன் மற்றும் தொழில் உருவாக்க மையம் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (SRMIST) தொடங்கப்பட்டுள்ளது. வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு தொழில் துறையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த மையம், ஆட்டோடெஸ்க் நிறுவனத்தின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் (EEE) துறைகளை உள்ளடக்கிய மாநிலத்தின் முதல் பல்துறை மையமாக இது செயல்படவுள்ளது. BIM, டிஜிட்டல் உற்பத்தி மற்றும் AI சார்ந்த வடிவமைப்பு போன்ற துறைகளில் நேரடி பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

ஆண்டுதோறும் சுமார் 2,000 மாணவர்களும், 100 பேராசிரியர்களும் இந்த மையத்தின் மூலம் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
