ராமகிருஷ்ணா மடத்திற்கு சுந்தரம் ஃபைனான்ஸ் வழங்கும் ‘ஸ்பிரிட் ஆஃப் மைலாப்பூர்’ விருது
சென்னை: சுந்தரம் ஃபைனான்ஸ் நிதி நிறுவனத்தின் 2025-ம் ஆண்டுக்கான ஸ்பிரிட் ஆஃப் மைலாப்பூர் விருதினை சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் ராமகிருஷ்ணா மடத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
125 ஆண்டிற்கும் மேலாக மயிலாப்பூர் பகுதியின் கலாச்சாரம், கல்வி மற்றும் உடல்நலன் ஆகிய பிரிவுகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதற்காக ராமகிருஷ்ணா மடத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் முடிவுபெற்ற மைலாப்பூர் திருவிழா 2025 – ல் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தமிழ்நாடு செயல் தலைவர் மோகன் வெங்கடேசன் ராமகிருஷ்ணா மடத்திற்கு வழங்கினார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது, மயிலாப்பூரில் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மைலாப்பூர் திருவிழாவின் போது சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
ஸ்பிரிட் ஆஃப் மைலாப்பூர் விருது, இதற்கு முந்தைய ஆண்டுகளில் ராயர்ஸ் மெஸ், சமஸ்கிருத கல்லூரி, எஸ்எஸ்வி பாடசாலா, விஜயா ஸ்டோர்ஸ், ராசி சில்க்ஸ், திரு. ராமனாதன் கிருஷ்ணன், பிஎஸ். மேநிலைப்பள்ளி, டப்பா செட்டி கடை மற்றும் புரொஃபசர் ஆர். ராமச்சந்திரா ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.