கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு புது வருட பிரார்த்தனை – சென்னையில் 40 அடி நீள கேக் வெட்டி கொண்டாட்டம்
சென்னை: கிறிஸ்தவ ஒருங்கிணைப்பில் புது வருட பிரார்த்தனை மற்றும் பேரின்பப் பெருவிழா சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. “இயேசு அழைக்கிறார்” நிறுவனத் தலைவர் டாக்டர் பால் தினகரன் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
புது வருட ஆசீர்வாதத்தின் அடையாளமாக 40 அடி நீள கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த 100 பேர் கொண்ட பாடகர் குழு பாடல்களைப் பாடி நிகழ்ச்சியை சிறப்பித்தது. இதில் மோகன் சி. லாசரஸ், சி.எஸ்.ஐ. சென்னை மண்டல பேராயர் பால் பிரான்சிஸ் உள்ளிட்ட கிறிஸ்தவ தலைவர்கள் கலந்து கொண்டு புது வருட ஆசீர்வாதத்திற்காக பிரார்த்தனை நடத்தினர்.
