ஐடிசி மங்கள்தீப் அறிமுகம் செய்யும் ஃபியூஷன்: அகர்பத்தியின் ஒரு புதிய அணிவரிசை
சென்னை: இந்தியாவின் முன்னணி நறுமண ஊதுபத்தி பிராண்டுகளுள் ஒன்றான, ஐடிசி மங்கள்தீப், மங்கள்தீப் ஃபியூஷன் என்ற பெயரில் அதன் ஊதுபத்தியின் புதிய அணிவரிசையை அறிமுகம் செய்திருக்கிறது. இப்புதிய தயாரிப்பானது, நுகர்வோர்களின் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கத்தோடு பாரம்பரியமான மற்றும் நவீன நறுமணங்களின் ஒரு புதுமையான கலவையாகும்.
நவீனத்தை வரவேற்கின்ற அதே நேரத்தில் அவர்களது ஆன்மிக செயல் நடைமுறைகளில் அமைதியையும், ஒத்திசைவையும் விரும்பித் தேடுபவர்களுக்காக மங்கள்தீப் ஃபியூஷன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்திய இல்லங்களில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்ற இயற்கையான மூலப்பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்களிலிருந்து கவனமாக தேர்வு செய்யப்பட்டவற்றை ஒருங்கிணைப்பதாக இந்த புதுமையான தயாரிப்புகளின் அணிவரிசை உருவாக்கப்பட்டிருக்கிறது. பக்திக்கு ஊதுபத்தி அனுபவத்தை ஒரு நவீன நறுமணம் மிக்க பயணமாக மேம்படுத்தி வழங்குவது இதன் நோக்கமாகும்.
ஃபியூஷனின் ஒவ்வொரு பேக்கிலும் 3 வெவ்வேறு வகை ஊதுபத்திகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பேக்கிலும் ஒரு பாரம்பரியமான மற்றும் ஒரு நவீனமான நறுமணத்தின் தனித்துவமான கலவைப்பேக்காக இது இருக்கும். சார்கோல் இடம்பெறாத நறுமண ஊதுபத்தியும் அதன் தனித்துவமான நறுமணக் கலவைகளின் மூலம் தினசரி பிரார்த்தனைகளுக்கு ஒரு புத்துயிர் ஊட்டும் மாற்றத்தை வழங்குகிறது. சந்தனக்கட்டையின் அமைதிப்படுத்தும் சாரம் மற்றும் வெட்டி வேரின் அற்புதமான வாசனை அல்லது லேவண்டரின் மனதை வருடும் நறுமணத்தோடு ஜாதிபத்திரியின் தனித்துவமான வாசனை சேர்த்து ஒரு பேக்கில் வழங்கப்படுகிறது. அதைப் போலவே, சாம்பிராணியின் செழுமையான வாசனையானது, அவுத் என்ற அரேபிய நறுமணத்துடன் ஒத்திசைவோடு ஒரு பேக்கில் இணைந்திருக்கிறது.
ஐடிசி லிமிடெட் – ன் தீப்பெட்டிகள் மற்றும் அகர்பத்தி பிசினஸ் டிவிஷனின் தலைமை அலுவலர் திரு. கௌரவ் தயாள், இப்புதிய அறிமுகம் குறித்து கூறியதாவது: “பாரம்பரியத்தை வலுப்படுத்தும் அதே நேரத்தில், புத்தாக்கத்தில் எங்களது ஆற்றலை உண்மையிலேயே பிரதிபலிக்கின்ற ஒரு அணிவரிசையான மங்கள்தீப் ஃபியூஷனை அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த புதுமையான அறிமுகம் குறித்து மங்கள்தீப் – ல் நாங்கள் பெரும் உற்சாகம் கொண்டிருக்கிறோம். இப்புதிய தயாரிப்பு அணிவரிசைக்கு எமது வினியோகஸ்தர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மட்டுமின்றி, நுகர்வோர்களிடமும் நாங்கள் கண்டிருக்கும் உற்சாகமும், வரவேற்பும் எங்களை பிரமிக்கச் செய்கிறது. இந்த புதிய அணிவரிசையானது, சாதாரணமான ஒரு புராடக்ட் அறிமுகம் மட்டுமல்ல; காலத்தைக் கடந்து நிற்கும் பக்தியின் நவீன பொருள் வரையறையாகவும் இது இருக்கிறது. நவீன நறுமணங்களுடன் நமது தேசத்தின் பாரம்பரியமான சிறந்த மூலப்பொருட்களை நேர்த்தியான முறையில் கலந்து தனித்துவமான வாசனையுடன் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.”
மங்கள்தீப் ஃபியூஷனின் புதுமையான நறுமண ஒருங்கிணைப்பு கலவைகள், நவீன இந்தியாவின் மாறிவரும் வாழ்க்கைமுறையை பிரதிபலிக்கின்றன. இளம் நுகர்வோர்களுக்கென புத்தாக்கமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நறுமணங்கள், லைஃப் ஸ்டைல், ஃபேஷன், இசை மற்றும் கலை ஆகியவற்றில் தற்காலத்தைய கலாச்சார ஃபியூஷனின் சாரத்தை அப்படியே கொண்டிருக்கின்றன. மங்கள்தீப் ஃபியூஷன் நறுமண ஊதுபத்திகள், இந்தியாவெங்கிலும் ரீடெய்ல் ஸ்டோர்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பிரபல ஆன்லைன் தளங்களில் விரைவிலேயே மின் வர்த்தக ஸ்டோர்களில் இவற்றை வாங்கி மகிழலாம்.