தமிழ் எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித் எழுதிய “மெராக்கி” நூலினை கோவா முதல்வர் வெளியிட்டார்
சென்னை: தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இளம் தமிழ் எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித் எழுதிய “மெராக்கி” என்ற ஆங்கில புத்தகத்தை கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், கோவாவில் நடந்த இலக்கிய விழாவில் வெளியிட்டார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக் மற்றும் நடிகை ஹேமா மாலினி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
மெராக்கி என்ற கிரேக்க சொல்லுக்கு மனது மற்றும் ஆன்மாவை முழுமையாக ஒரே செயலில் செலுத்துவது என்று அர்த்தம். இந்நூல் எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித்தின் ஐந்தாவது ஆங்கில மொழி புத்தகம் ஆகும்.
இலக்கியத்தில் புதிய கோணங்களை ஆராய்கிறது. இந்த புத்தகம் வாசகர்களை மன அமைதியுடன் வாழவும், இன்பம், துக்கம், வெற்றி மற்றும் தோல்வி போன்ற வாழ்க்கையின் பரிமாணங்களை சமநிலையில் ஏற்றுக்கொள்ளவும் வழிகாட்டுகிறது.
இந்த புத்தகம் தற்போது 120 நாடுகளில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது மற்றும் அமேசான், கூகிள் புக்ஸ் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் போன்ற முன்னணி ஆன்லைன் தளங்களில் நேர்மறையான வரவேற்பை பெற்றுள்ளது.
“இந்த புத்தகம் வாசகர்களை வாசகர்களை மட்டுமல்ல, எழுத்தாளர்களையும் உருவாக்கும். இது வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களையும் ஏற்றுக்கொண்டு மன அமைதியுடன் வாழ வழிகாட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது” என்று அந்நூலின் ஆசிரியர் ஜோசன் ரஞ்சித் கூறினார்.