City Updates

ஜெகதீஷ் கடவுளுக்கு காஞ்சி மடத்தின் பாரதிய கலாச்சார சேவா மணி விருது வழங்கி கௌரவம்

தர்மத்தை நாம் காத்தால், தர்மம் நம்மை காக்கும் என்பது வேத வாக்கியம், ‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு’ என்பார் வள்ளுவர். அந்த வகையில் பாரம்பரியமான ஸ்வர்ண கலைநயமிக்க நகை வியாபாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்து, வறியவர்க்கு ஈதல் வேண்டும், அதனால் புகழ் ஈட்டலே சிறப்பு என்ற உயரிய நோக்குடன் செயல்பட்டுவருபவர் ஸ்ரீ ஜகதீஷ் கடவுள் அவர்கள்.

2023-ல்சென்னையில் உலக அமைதிக்காக ஆயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்கள்பங்கேற்ற சத்சங்கம் ஒன்றை நடத்திய பெருமைக்குரியவர். தமிழ்க் கலாச்சார அகாடமி என்ற அமைப்பைத் தோற்றுவித்து தமிழ்ப் பணிகளையும்ஆற்றிவருபவர். பொதுமக்கள், குறிப்பாக, இளைஞர்கள் நல்வழிப்பாதையில் செல்வதற்கு வழிவகை செய்து வருபவர்.

jagadesh kadavul honoured

திருவண்ணாமலையில் செயல்பட்டுவரும் வேத ஆகம தேவார கலாச்சார அறக்கட்டளையின் டிரஸ்டியாக இருந்து, 2025 செப்டம்பர் 13, 14 தேதிகளில் மாபெரும் ஆன்மீக கலாச்சார மாநாட்டை தலைமை குருக்கள் டாக்டர் பி.டி. ரமேஷ் குருக்கள் மற்றும் பக்தகோடிகளுடன் ஒருங்கிணைந்து சிறப்புற நடத்தியதில் பெரும்பங்கு வகித்தவர்.

அவரது சமய, சமுதாயப் பணிகளைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில்,ஸ்ரீ ஜெகதீஷ் கடவுள் அவர்களுக்கு பாரதிய கலாச்சார சேவா மணி என்னும் விருதும், இளவரசு பட்டம் பி.டி.ரமேஷ் அவர்களுக்கு ஆலய ஆகம அறப்பணி செம்மல் என்ற விருதும் திருவண்ணாமலையில் சமீபத்தில் நடைபெற்ற வேத ஆகம தேவார சமய கலாச்சார மாநாட்டில் இந்து சமய மன்றம் சார்பில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *