ADATA செமிகன்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
காஞ்சிபுரம்: செமிகன்டக்டர் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான தைவான் நாட்டை சேர்ந்த ADATA Technology, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தித் தொழிற்சாலையை துவங்கவுள்ளது. இதற்கான கட்டுமான பணி பூமி பூஜையுடன் இன்று துவங்கியது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள SIPCOT Industrial Park வளாகத்தில் ADATA நிறுவனத்தின் புதிய அரைக்கட்டமைப்பு உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல்லை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
ADATA Semiconductor Private Limited மேற்கொள்ளும் இத்திட்டம் ரூ. 931 கோடி முதலீட்டில் உருவாகிறது. இந்த உற்பத்தி நிலையம் மூலம் சுமார் 823 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தொழிற்சாலையில் டெஸ்க்டாப், லேப்டாப் மற்றும் சர்வர்கள் பயன்பாட்டிற்கான DRAM நினைவக மாட்யூல்கள், மேலும் Flash Drive உள்ளிட்ட உயர் தர சேமிப்பு சாதனங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இந்த முதலீடு தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி மின்னணு மற்றும் அரைக்கட்டமைப்பு உற்பத்தி மையமாக உருவாக்கும் முயற்சிக்கு மேலும் வலுசேர்க்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சி முழுமையாக Helinto Events & Travels Private Limited நிறுவனத்தினால் திட்டமிட்டு சிறப்பாக நடத்தப்பட்டது. நிறுவன இயக்குநர் ராஜ் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் ஆகியோர் நேரடியாக மேற்பார்வை செய்தனர்.
இந்த திட்டம், தமிழ்நாட்டில் உயர் தொழில்நுட்ப முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான மற்றொரு முக்கியக் கட்டமாகக் கருதப்படுகிறது.
