கிளாம்பாக்கம் அருகே வீட்டு மனைகளை அறிமுகப்படுத்திய கிங்மேக்கர்ஸ் நிறுவனம்
சென்னை: ரியல்எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கிங்மேக்கர்ஸ் நிறுவனம் தனது புதிய மனைப்பிரிவை கிளாம்பாக்கம் அருகே படப்பையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள படப்பையில் 100 ஏக்கர் பரப்பளவில் வேலம்மாள் கார்டன் வீட்டுமனை பிரிவின் துவக்க விழா நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இதுபற்றி கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகர் கூறியதாவது,
“கடந்த 19 ஆண்டுகளாக ரியல்எஸ்டேட் துறையில் கொடிகட்டி பறக்கும் கிங்மேக்கர்ஸ் நிறுவனம் 96,800 மகிழ்ச்சிகரமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. சென்னையின் நுழைவாயிலான கிளம்பாக்கம் அருகே 8-கி.மீ தொலைவில் படப்பையில் 100 ஏக்கரில் வேலம்மாள் கார்டன் என்ற பெயரில் வீட்டுமனைப்பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
துவக்கவிழா சலுகையாக ஒரு சதுர அடி வீட்டுமனையின் விலை ரூ.2999 /- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனை தொடங்கும் நாளன்று ரூ.3500 /- ஆக உயரும், அதற்கு பின்னர் ஒரு சதுர அடியின் விலை ரூ.3999/- உயர் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
வேலம்மாள் கார்டனில் 10 ஏக்கரில் அடுக்குமாடி குடியிருப்புகளும், 10 ஏக்கரில் வில்லா அமைப்பில் தனி வீடுகளும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. சாலை வசதி, குடிநீர் வசதி, பூங்கா, மின்விளக்கு, பசுமை திட்ட மியாவாக்கி காடுகள் என இங்கு 42 வகையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மக்களின் அடிப்படை தேவைகள், பள்ளிக் கல்லூரிகள் இந்த வீட்டுமனைப்பிரிவுகள் மிக அருகாமையில் அமைந்துள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்தை மையமாக வைத்து சுற்றுப்புற பகுதிகள் வளர்ச்சியடைந்தது போன்று பட்டப்பை பகுதியும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகில் இருப்பதால் உடனடி வளர்ச்சி அடையும். இன்று முதலீடு செய்வோருக்கு ஒரு நம்பிக்கையான இடமாக வேலம்மாள் கார்டன் விளங்கும்” என்று தெரிவித்தார்.