முன்னேறு தமிழா பாடல் வெளியீட்டு விழா
சென்னை: சென்னை மதுரவாயலில் உள்ள எஸ்.பி.பி கார்டனில் மெட்ராஸ் சிட்டி ப்ராபர்ட்டிஸ் நிறுவனத்தின் 17-ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி முப்பெரும் விழா நடைபெற்றது.
மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்வில் மெட்ராஸ் சினி புரொடக்ஷன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தின் சாருகேசி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், திரை பிரபலங்கள் ஒய்.ஜி.மகேந்திரன், நடிகை சுஹாசினி மணிரத்தினம், நடிகர் பார்த்திபன், இசையமைப்பாளர் தேவா, ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சாருகேசி திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மெட்ராஸ் சிட்டி ப்ராபர்ட்டிஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெயச்சந்திரன் எழுதி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த “முன்னேறு தமிழா” பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இப்பாடலினை வி.ஐ.டி.கல்லூரியின் தலைவர் விஸ்வநாதன், நடிகர் பார்த்திபன் ஆகியோர் வெளியிட்டனர்.
தொடர்ந்து 2025 ஆம் ஆண்டிற்கான முன்னேறு தமிழா விருதுகள் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டன.
மெட்ராஸ் சிட்டி ப்ராபர்ட்டிஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெயச்சந்திரன் பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.