மாரடைப்பிற்கு 49 நிமிடங்களில் சிகிச்சையளித்து வடபழனி காவேரி மருத்துவமனை சாதனை
சென்னை வடபழனியில் இயங்கிவரும் காவேரி மருத்துவமனை மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 49 நிமிடங்களில் சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு அம்மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவமனையின் இதயநோய் நிபுணர்கள் மனோகர், மகேஷ், மகாதேவன், சுந்தர், அரவிந்தன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசுகையில், வடபழனி காவேரி மருத்துவமனையில் கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மொத்தமாக மாரடைப்பு காரணமாக15 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளோம்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு நேரங்களில் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் மருத்துவமனையை அடைந்த நேரத்தில் இருந்து சுமார் 49 நிமிடங்களுக்குள் உரிய சிகிச்சை மேற்கொண்டு நோயாளிகளின் இன்னுயிரை காப்பாற்றியுளாம்.
சர்வதேச அளவில் மாரடைப்பின் காரணமாக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிக்கு 90 நிமிடங்களுக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது மருத்துவ விதியாக உள்ளது. ஆனால், வடபழனி காவேரி மருத்துவமனையில் இதுபோன்ற அவசர சிகிச்சைகளுக்காக பிரத்யேக மருத்துவ குழுவினர் தொடர்ந்து 24 மணிநேரமும் பணியில் இருப்பதால் 49 நிமிடங்களுக்குள் சிகிச்சை அளிக்கமுடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Door to Balloon Time என்பது நெஞ்சுவலியால் அவசர மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையை வாயிலை அடையும் நோயாளி முதலில் எமெர்ஜன்சி பிரிவில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து, மூத்த இதயநோய் மருத்துவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை அரங்கு தயார் செய்யப்படுகிறது.
நோயாளியை எமெர்ஜன்சி பிரிவில் இருந்து அறுவை சிகிச்சை அரங்கிற்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக குறிப்பிட்ட லிப்ட் வசதி தனியாக தயார் நிலையில் இருக்கும்.
24 மணி நேரமும் இயங்கக்கூடிய cathlab மூலம் நோயாளியின் இதயம் கண்காணிக்கப்படுகிறது.
இதற்கிடையே நோயாளியின் உறவினர்களிடம் நோயின் தன்மை, அதற்கான சிகிச்சை முறைகள் எடுத்துரைக்கப்பட்ட சிகிச்சைக்கான ஆவண தயாரிப்பும் துரித முறையில் முடிக்கப்படுகிறது.
மருத்துவமனையிலேயே 24 மணிநேரமும் பணியாற்றும் இதயநோயியல் மருத்துவர்கள் மூலம் நோயாளிக்கு விரைவாக துல்லியமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுபோன்ற காரணங்களினால் சர்வதேச மருத்துவ கவுன்சில் விதித்துள்ள 90 நிமிடம் என்பதை 49 நிமிடங்களில் எங்களது மருத்துவமனையில் மாரடைப்பிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஒருவருக்கு நெஞ்சுவலி அசாதாரணமாக இருந்தால் அதனை வாயு தொல்லை என்று உதாசிணமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மாரடைப்பிற்கான சிகிச்சையில் நேரம் மிகவும் முக்கியம். எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனையை அணுகுகிறோமோ, உயிர் காப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறினர்.
