Corporate News

எம்ஜிஎம் மலர் அடையார் மருத்துவமனையில் 54 வயதான சர்வதேச கால்பந்தாட்ட பயிற்சியாளருக்கு வெற்றிகரமான முழங்கால் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை

சென்னை: எம்ஜிஎம் ஹெல்த்கேர் குழுமத்தின் ஒரு அங்கமான எம்ஜிஎம் மலர் அடையார், கேமரூன் நாட்டைச் சேர்ந்த 54 வயதான சர்வதேச கால்பந்தாட்ட வீரரும் மற்றும் கொலம்பே ஸ்போர்ட்டிவ் டு டிஜா எட் லோபோ கால்பந்தாட்ட குழுவின் தற்போதைய மேலாளருமான ரிச்சர்ட் டோவா என்பவருக்கு முழுமையான முழங்கால் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டிருப்பதை இன்று அறிவித்திருக்கிறது; கேரளா ஃபுட்பால் கிளப்-ன் முன்னாள் பயிற்சியாளராகவும் திரு. ரிச்சர்ட் டோவா இந்தியாவில் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்தாட்ட மைதானத்தில் இவரது மிகச்சிறப்பான திறன்களுக்காக அறியப்படும் திரு. ரிச்சர்ட் டோவா, முன்னாள் தொழில்முறை கால்பந்தாட்ட வீரராகவும் மற்றும் அதிகம் மதிக்கப்படும் கால்பந்தாட்ட பயிற்சியாளராகவும் இருக்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கும் அதிகமாக சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு கடுமையான முழங்கால் வலி என்ற வரலாற்றுடன் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் அடையார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் வருகை தந்தார். தினசரி பணிகளைச் செய்வதிலும் அவர் பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறார். அத்துடன் அவரது முழங்காலில் உருக்குலைவு பிரச்சனையும் இருந்தது. இவரது நடமாட்டத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் கடுமையாக பாதிப்பதாக இப்பிரச்சனைகள் அவருக்கு இருந்திருக்கின்றன. இவருக்கு செய்யப்பட்ட எக்ஸ்-ரே சோதனைகளும், மருத்துவ மதிப்பீடுகளும், மூட்டு சீரழிவு முதிர்ச்சியடைந்த நிலையிலிருப்பதை வெளிப்படுத்தினார். இதற்கு உடனடியாக அறுவைசிகிச்சை செய்வதன் அவசியத்தையும் உணர்த்தின. அவரது வலது முழங்கால் மூட்டில் கிரேடு IV எலும்புப்புரை நோயின் கடுமையான பாதிப்பும் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து 2024 நவம்பர் 7-ம் தேதியன்று எம்ஜிஎம் மலர் அடையார் மருத்துவமனையின் எலும்பியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். நந்தகுமார் சுந்தரம் தலைமையிலான மருத்துவர்கள் குழு வலது முழங்கால் மாற்று அறுவைசிகிச்சையை இவருக்கு வெற்றிகரமாக செய்திருக்கிறது.

கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் மத்தியில் முழங்கால் காயங்கள் மிகப் பொதுவான உடல்நல பிரச்சனைகளுள் ஒன்றாக இருக்கின்றன. விரைவாக திரும்புவது, வேகமாக ஓடுவது, குதிப்பது, எத்துவது மற்றும் செல்லும் திசைகளில் திடீர் மாற்றங்களைச் செய்வது ஆகியவை தேவைப்படும் இந்த விளையாட்டின் தீவிரமான தன்மையினால் இத்தகைய காயங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய செயல்பாடுகளினால் தசைநாண், குருத்தெலும்புகள் மற்றும் பிற மென்திசுக்கள் உட்பட முழங்கால் மூட்டின் கட்டமைப்புகளின் மீது கடுமையான அழுத்தம் மற்றும் காயங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதிகளவு உடல் தொடர்பு இருக்கக்கூடிய ஒரு விளையாட்டான கால்பந்தாட்டமானது, பல்வேறு காயங்களுக்கு அதுவும் குறிப்பாக முழங்கால்களில் காயங்கள் ஏற்படுவதற்கு குறிப்பிடத்தக்க இடர்வாய்ப்புகளை இயல்பாகவே கொண்டிருக்கிறது.

டாக்டர். நந்தகுமார் சுந்தரம், “ACL, MCL, தசைக் குருத்தெலும்பு கிழிசல்கள் போன்ற முழங்கால் காயங்கள் கால்பந்தாட்டத்தில் பொதுவாக ஏற்படுவதால் திறம்பட செயல்படும் முன்தடுப்பு உத்திகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வது அவசியம். கால்பந்தாட்ட வீரர்களைப் பொறுத்தவரை முழங்கால் மூட்டின் முக்கியத்துவம் மிக முக்கியமானதாகும். கால்பந்தாட்டம் என்பது விளையாடும் நபர்களுக்கிடையே அதிக தொடர்பும், மோதலும் உள்ள ஒரு விளையாட்டாகும்; இதற்கு விரைவான இயக்கத்திறன் தேவைப்படுகிறது; ஓடுவது, குதிப்பது, எத்துவது மற்றும் மிக வேகமாக திசையில் மாற்றங்கள் போன்றவற்றை சார்ந்திருக்கக்கூடிய விளையாட்டாக இது இருக்கிறது. விளையாட்டின்போது நடைபெறுகிற இந்த செயல்பாடுகள் அனைத்தும், முழங்கால் மூட்டு மீது கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இந்த அழுத்தத்தோடு, விளையாட்டின் அதிக தீவிரத்தன்மையும் இணைகிறபோது சிறிய காயங்கள் மட்டுமன்றி ஒரு விளையாட்டு வீரரின் விளையாட்டு ஆயுளையே பாதிக்கக்கூடிய கடுமையான காயங்கள் ஏற்படக்கூடும்” என்று கூறினார் .

“”ரிச்சர்ட் டோவா-ஐ பொறுத்தவரை முதிர்ச்சியடைந்த கிரேடு IV என்ற நிலையிலிருந்த எலும்புப்புரை நோயானது கணிசமான வலி மற்றும் உருக்குலைவை ஏற்படுத்தியிருந்தது. எளிமையான தினசரி செயல்பாடுகளை மேற்கொள்வது கூட வலிமிகுந்த ஒரு சவாலாக அவருக்கு மாறியிருந்தது. எனவே அவருக்கு இருந்த வலியைத் தணிப்பது மட்டுமன்றி, வழக்கமான நடமாட்டத்திறனையும் அவருக்கு வழங்குவதே எமது நோக்கமாக இருந்தது. இதன் மூலம் எவ்வித கட்டுப்பாடோ, வரம்புகளோ இல்லாமல் அவரது தினசரி வாழ்க்கையில் பிறரது உதவியில்லாமல் செய்யக்கூடிய சுதந்திரத்தை அவர் பெற வேண்டுமென்பது எமது விருப்பமாக இருந்தது. இந்த அறுவைசிகிச்சையில் சேதமடைந்த திசு மற்றும் எலும்பு வளர்ச்சியை அகற்றுவது, தொடை மற்றும் கெண்டைக்கால் எலும்புகளை துல்லியமாக வடிவமைப்பது மற்றும் சிமெண்டைப் பயன்படுத்தி முழங்கால் மூட்டு கூறுகளை நிலையாகப் பொறுத்துவது ஆகிய செயல்பாடுகள் இடம்பெற்றிருந்தன. முழங்காலின் முன்புற பகுதிகளின் வழியாக குறைவான ஊடுருவலுள்ள உத்தியைப் பயன்படுத்தி இந்த சிகிச்சை செயல்முறை மேற்கொள்ளப்பட்டது; சிறப்பான மூட்டு நிலைப்புத்தன்மையையும் மற்றும் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு மேம்பட்ட நடமாட்டத் திறனையும் உறுதி செய்வதற்கு இந்த சிகிச்சை செயல்முறை உதவியிருக்கிறது” என்று டாக்டர். நந்தகுமார் சுந்தரம் மேலும் கூறினார்.

“அவரது நடமாட்டத்திறன் மற்றும் மூட்டு இயக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக திரு. டோவாவிற்கு செய்யப்பட்ட அறுவைசிகிச்சை அமைந்தது. சுறுசுறுப்பான அவரது வாழக்கை முறை செயல்பாடுகளை இயல்பாக மேற்கொள்வதையும் மற்றும் கால்பந்தாட்ட பயிற்சியாளராக அவரது பணியை தொடர்வதையும் இது உறுதி செய்திருக்கிறது. மேம்பட்ட அறுவைசிகிச்சை உத்திகள் மற்றும் அனுபவமிக்க நிபுணத்துவ சிகிச்சையின் மூலம், இந்த கால்பந்தாட்ட பயிற்சியாளரது குணமடைதலில் ஒரு முக்கிய பங்கு வகித்திருப்பது குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம்; கேமரூனிலுள்ள அவரது கால்பந்தாட்ட குழுவிற்கு பயிற்சியளிக்க மிக விரைவிலேயே அவர் களம் இறங்குவதைக் காண நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்” என்று டாக்டர். நந்தகுமார் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

எம்ஜிஎம் மலர் அடையார் மருத்துவமனையில் தனது சிகிச்சை அனுபவம் குறித்து பேசிய திரு. ரிச்சர்ட் டோவா, “எனது வலது முழங்காலில் நான் எதிர்கொண்ட பிரச்சனையும், கடுமை மற்றும் தீவிரத்தன்மையின் காரணமாக ஒரு பயிற்சியாளராக எனது பணிக்கு மீண்டும் என்னால் திரும்ப முடியுமென்று நான் ஒருபோதும் கருதவில்லை. எனது உற்சாகமான உணர்வுகளை குறைத்து நம்பிக்கையிழப்பு எனக்கு ஏற்படத் தொடங்கியது. எம்ஜிஎம் மலர் அடையார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நான் வந்த பிறகு நேர்மறையான சிந்தனைகளும், நம்பிக்கையும் என்னுள் துளிர்வுடத் தொடங்கின. அவர்களது மிக நவீன சிகிச்சை செயல்முறைகளும் மற்றும் மிக முக்கியமாக அவர்கள் வழங்கிய ஆலோசனை மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளும் என்னை இயல்பு நிலைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றன. எவ்வித வலியோ அல்லது சிரமமோயின்றி எனது நடமாட்டத்திறனை நான் மீண்டும் பெறுவதற்கு எனக்கு உதவியதற்காக எம்ஜிஎம் மலர் மருத்துவமனையின் நிர்வாகத்திற்கும், எனக்கு சிகிச்சையளித்த டாக்டர். நந்தகுமார் சுந்தரம் மற்றும் அவரது ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று உற்சாகத்தோடு தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *